நவம்பரில் அடுத்த தேர்தல் திருவிழா! – உள்ளூராட்சி சபைகளுக்கு நடக்கும்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கலைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு நவம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய முறைமையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த தேவையான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கையொப்பமிட்டுள்ளார்.

335 உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் விகிதாசார மற்றும் தொகுதிவாரி அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.பகுதி பகுதியாக தேர்தலை நடத்தாது ஒரே தடவையில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply