இலங்கை அரசு டி.வி.க்கு ராஜபக்சே ரூ.115 கோடி கடன் பாக்கி

கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிட்டார். அதில் தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். தேர்தலின்போது ராஜபக்சே அரசு டெலிவிmahindaஷனில் விளம்பரங்கள் செய்தார். கடன் அடிப்படையில் அவை ஒளிபரப்பப்பட்டன. அதில், மொத்தம் ரூ.115 கோடிக்கு அவர் தேர்தல் விளம்பரம் செய்துள்ளார். இவருக்கு மிக குறைந்த அளவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் அந்த தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார். அந்த விவரம் ராஜபக்சே ஆட்சியின்போது நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்கும் விசேஷ அதிபர் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து அரசு டெலிவிஷன் முன்னாள் தலைவர் உள்பட 7 பேருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பான சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply