லண்டன் ஓட்டல் அறையில் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மரணம்

லண்டனில் உள்ள ஓட்டல் அறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் இறந்து கிடந்தார். londonதெற்கு லண்டனில் உள்ள மிட்சாம் பகுதியில் வசித்து வந்தவர் ஜான் நெவில் சிங். 67 வயதான அவர், கடந்த 19-ம்தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குரோய்டனில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த நபர் அங்குள்ள அறையில் பிணமாக கிடந்தார். அவர் தங்கியிருந்த அறை நீண்டநேரம் திறக்கப்படாமல், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் இருந்தால் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து அறைக்கதவை திறந்து சடலத்தை மீட்டனர்.

இறந்து கிடந்தது, காணாமல் போனதாக கூறப்படும் சிங் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக அவர்தான் என அடையாளம் காட்டப்படவில்லை. இதற்காக அவரது வாரிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இப்போதைக்கு சந்தேக மரணம் என்று கூறக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உறுதியாக கூற முடியும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் தொழிலில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சிங், மத்திய அமெரிக்க நாடான பெலிசில் நீதிபதியாக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply