மியான்மர் எல்லையில் இந்திய ராணுவம் மீண்டும் அதிரடி தாக்குதல்
மியான்மர்
எல்லை அருகே இந்திய ராணுவம் மீண்டும் அதிரடித் தாக்குதல் நடத்தியதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய – மியான்மர் எல்லைப் பகுதியில் இருந்தபடி பி.எல்.ஏ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இருநாட்டு எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக இருநாட்கள் கழித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவம் மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply