வடமாகாணசபையின் அனுமதியின்றி ஜெனீவா செல்ல முடியாது! : சீ.வி.கே.சிவஞானம்
வடமாகாணசபையின் உறுப்பினர்கள் எவரும் அனுமதியின்றி ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பாக கலந்து கொள்ள முடியாது என வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அதேவேளை, தனிப்பட்ட முறையில் அவர்கள் ஜெனீவா அமர்வுகளில் பங்கெடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்வரும் 14 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மாகாணசபை சார்பில் உறுப்பினர்கள் குழு பங்கேற்குமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
இதுவரையில் மாகாணசபை உறுப்பினர்கள் எவரினதும் விண்ணப்பம் கிடைக்கப்பெறவில்லை என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு மாகாணசபை என்பது அங்கீகாரம் பெற்ற அமைப்பு அல்ல என்றும் அவ்வாறு மாகாணசபை உறுப்பினர்கள் தாம் அங்கு செல்ல விரும்பினால் தமது தனிப்பட்ட விருப்பில் செல்லாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply