அரசாங்கத்தில் அமைச்சர்கள் அதிகம்:சோபித்த தேரர்
தேசிய அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் காணப்பட்ட
எண்ணிக்கைக்கு எந்தவகையிலும் இரண்டாம் தரமன்று எனவும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தான் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் நீதியான சமூகத்துக்கான தேசிய அமைப்பின் தலைவர் சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் 30 அமைச்சர்களை அமைப்பதற்கே தேர்தலில் மக்கள் ஆணையை வழங்கினர். தற்பொழுது, பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் அல்லாத யாரும் இல்லையென்று நினைக்கும் அளவுக்கு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆட்களைத் தேடும் நிலையில் அரசாங்கம் உள்ளது எனவும் தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply