அமைச்சர்களுக்கான ஒருமாத செலவு 20 கோடி : வீரவன்ச
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் மற்றும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற
உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டுகின்றார். அமைச்சரவை உறுப்பினர்கள் 93 பேருடன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் 22 பேரை கூட்டும்போது வரும் 115 பேரை நிர்வகிக்க குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு 20 கோடி ரூபா ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவர்களுக்கு 711 வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடும் அவர், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஒருவருக்கு கபினட் அமைச்சர் ஒருவருக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply