அமெரிக்க பயணம்: நியூயார்க்கில் 28-ந்தேதி மோடி : ஒபாமா சந்திப்பு
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் இம்மாத இறுதியில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் செல்கிறார். அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்கிறார். அவர்களது சந்திப்பு வருகிற 28–ந்தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தின் முதல் நாளில் அதிபர் ஒபாமா பேசுகிறார். இருந்தாலும் தீவிர பணிகளுக்கு இடையே பிரதமர் மோடிக்காக தனது நேரத்தை ஒதுக்கியுள்ளார்.
அப்போது, அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோபிடன் உள்ளிட்டோர் அடங்கிய உயர் நிலையக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருந்தாலும் அதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக வருகிற 27–ந்தேதி சிலிக்கான் வேலியில் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேசுகிறார். அன்று இரவே நியூயார்க் புறப்பட்டு சென்று ஒபாமாவை சந்திக்கிறார்.
இவர்களது சந்திப்புக்கு பிறகு ஒரு வாரத்துக்கும் மேலாக இரு தரப்பு உயர்நிலை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் வாஷிங்டனில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் துணை அதிபர் ஜோபிடன் பங்கேற்பார் என தெரிகிறது.
கடந்த ஜனவரி 26–ந்தேதி இந்திய குடியரசு தின விழாவில் அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதன் பின்னர் இரு நாடுகளிடையே நடைபெறும் உயர் நிலை அதிகாரிகள் கூட்டம் இதுவாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply