விநாயகர் ஊர்வலத்தில் மக்களை கொன்று குவிக்க 2 ஆயிரம் பேர் ஊடுருவல்? வாட்ஸ்அப் தகவலால் போலீசார் கலக்கம்
ஐதராபாத் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஐதராபாத் போலிசிவிக் பகுதியைச் சேர்ந்த இவர் அபுதாகியில் தங்கி இருந்து இந்திய இளைஞர்கள் பலரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைத்து உள்ளார். அவர் மூலம் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து கைதான சல்மான் மொய்தின் என்ற வாலிபர் மூலம் அந்த பெண் பிடிபட்டார்.
இந்த நிலையில் ஐதராபாத் நகரில் வாட்ஸ் அப்பில் பரவி வரும் திடுக்கிடும் தகவலால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கேய்ஸ் கேங் என்ற பெயரில் பரவி வரும் அந்த தகவலில் ஐதராபாத் நகரில் நடக்கும் விநாயகர் ஊர்வலத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிக்க 2 ஆயிரம் பேர் ஊடுருவி உள்ளனர். இவர்களில் 145 பேரை மெகபூப்நகர் போலீசார் கைது செய்து உள்ளனர். பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
வேகமாக பரவி வரும் இந்த தகவல் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த தகவலை போலீசார் மறுத்து உள்ளனர். வாட்ஸ் அப் வெறும் புரளிதான். அதனை யாரும் நம்ப வேண்டாம். மெகபூப் நகர் போலீசாரால் யாரும் கைது செய்யப்படவில்லை என்று நகர சிறப்பு படை பிரிவு போலீஸ் இணை கமிஷனர் நாகி ரெட்டி கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க நடக்கும் சதி என்றும் வாட்ஸ் அப் தகவல் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வாட்ஸ் அப் தகவலை பரப்பியவர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக முடுக்கி விடப்பட்டு உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply