சிங்கப்பூர் பொது தேர்தல்: அபார வெற்றி பெற்ற ஆளுங்கட்சி
கடந்த அரை நூற்றாண்டு காலமாக (நாடு சுதந்திரம் அடைந்த 1965 முதல்) சிங்கப்பூரை ஆட்சி செய்து வரும் மறைந்த மாமனிதர் லீ குவான் யூ-வை, நிறுவனர்களில் (Founders) ஒருவராகக் கொண்ட மக்கள் செயல் கட்சி (PAP) பொது தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. சிங்கப்பூரின் 12வது பொது தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 29 தொகுதிகளை கொண்ட சிங்கப்பூர் 13 தனிதொகுதியையும், 16 குழுத் தொகுதிகளையும் கொண்டது. இதில் உள்ள, 89 நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியில் 181 பேர் போட்டியிட்டனர். இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாட்டாளிக் கட்சி 28 தொகுதிகளிலும், தேசிய ஒருங்கிணைப்புக் கட்சி 12 இடங்களிலும், ஜனநாயக கட்சி 11, சீர்திருத்தக் கட்சி 11, சிங்க் பர்ஸ்ட் கட்சி 10, ஜனநாயக கூட்டணி 6, சிங்கப்பூர் மக்கள் கட்சி 8, மக்கள் சக்தி 4, சுயேச்சையானோர் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி, 89 தொகுதிகளில் 49 தொகுதிகளை வென்று மக்கள் செயல் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள 39 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வெற்றியை அடுத்து, பிரதமர் லீ ஹூசின் லூங் தனது ஆதரவாளர்களுக்கும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். சிங்கப்பூரில் 1965-ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சி, 12 வது முறையாக தேர்தலில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply