10,000 அகதிகளுக்கு அடைக்கலம்: அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவு

obama”சிரியாவைச் சேர்ந்த, 10 ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க, அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்,” என, அவரது செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இம்மாத இறுதியுடன் முடிவடையும் நிதியாண்டில், அமெரிக்கா, 1,800 சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், குறைந்தபட்சம், 10 ஆயிரம் சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க, நடவடிக்கை எடுக்குமாறு, ஒபாமா உத்தரவிட்டுள்ளார். சிரியா உள்நாட்டு போரால், 40 லட்சம் பேர், வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இது, மிகப் பெரிய பிரச்னை. ஆனால், அனைவருக்கும் அமெரிக்கா அடைக்கலம் கொடுக்க முடியாது. அதே சமயம், அகதிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, அமெரிக்கா தாராளமாக உதவும். அகதிகள் நல்வாழ்விற்காக, அமெரிக்கா, ஏற்கனவே, 40 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அதோடு, ஆண்டுக்கு, 70 ஆயிரம் சர்வதேச அகதிகளுக்கு, அடைக்கலம் அளித்து வருகிறது. ஆனால், சிரியா அகதிகளை ஏற்பதில் மட்டும், சற்று நிதான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சிரியாவில் இருந்து, அகதிகள் என்ற போர்வையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம், அமெரிக்காவிற்கு உள்ளது. அதனால் தான் அந்நாடு, ஐ.நா., பதிவு செய்த அகதிகளைக் கூட, கடுமையான, பல கட்ட சோதனைக்குப் பின்பே, ஏற்றுக் கொள்கிறது. ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும்போது, அமெரிக்கா ஏற்கும் அகதிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக உள்ளது. அதனால், வரும் ஆண்டில், குறைந்தபட்சம், 65 ஆயிரம் சிரியா அகதிகளையாவது ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, அமெரிக்காவை சேர்ந்த, 65 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனு, ஒபாமா அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply