ஆங் சான் சூகி பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Sigi மியான்மரில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஆன் சாங் சூகி தலைமையில் நடைபெற்ற பேரணியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மியான்மரில் வருகிற நவம்பர் 8-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.  25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மியான்மரில் தேர்தல், நியாயமான முறையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த தேர்தலில், ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் வேட்பாளரும் நடப்பு எம்.பி.யுமான நயிங் நிகன் லின் பிரச்சார கூட்டத்தில், மர்ம நபர் ஒருவர் கூட்டத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினார். இதில் இருவர் காயமடைந்தனர். 

 

இந்நிலையில், ஆன் சாங் சூகி தலைமையில் நடைபெற்ற பேரணியில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அப்போது எதிர் தரப்பினர் தவறான வழியில் வெற்றி பெற முயற்சி செய்வதாகவும், தேர்தல் வரை தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

சூகியின் காலஞ்சென்ற கணவரும், அவரது இரு மகன்களும் மியான்மரைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்ற காரணத்தினால் அந்நாட்டின் சட்டப்படி அவர் அதிபராவதற்குத் தடை உள்ளது. இருப்பினும் தேர்தலில் தங்களுடைய ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அதிபராக இல்லாவிட்டாலும், புதிதாக அமைக்கவுள்ள அரசை தானே தலைமை ஏற்று வழி நடத்துவேன் என்று ஆன் சாங் சூகி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply