சென்னை கடற்கரையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரெயில்

reinசென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் இன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படுகிறது.இதுபோல பெங்களூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு நாளை  காலை 9 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜாரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஒயிட்பீல்டு, கிருஷ்ணராஜபுரம், மற்றும் பெங்களூர் கண்டோன்மென்ட் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயிலில் 2–ம் வகுப்பு வசதி கொண்ட உட்கார்ந்து செல்லும் 17 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply