பொலிஸார் மீது துப்பாக்கி சூடு 2 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு கgun fireண்டி பிரதான வீதியில் தளுகம பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர். குறித்த பகுதியில் லொறி ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளானதையடுத்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி விட்டு செல்லும் போது, இனந்தெரியாத நபர் ஒருவரினால் மோட்டார் வாகனத்தில் இருந்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை பொலிஸ் அதிகாரிகள் துரத்தி சென்ற போதே, குறித்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் முதலில் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளதாகவும், அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதா என தகவல்கள் வெளியாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply