பஞ்சாப் விமானபடை தளம் அருகே மேலும் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கல்: தேடுதல் வேட்டை தீவிரம்

panjapபஞ்சாப் மாநிலம் பதான் கோர்ட்டில் உள்ள விமான படை தளத்தை தகர்க்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.அந்த முகாமை தகர்ப்பதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போர் விமானங்கள், தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்களை குண்டு வைத்து அழிக்க வேண்டும் என்ற நாசவேலை திட்டத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவி இருந்தனர்.தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் 3 நாட்கள் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பாதுகாப்புபடை வீரர்கள் தரப்பில் 7 பேர் பலியானார்கள். இதையடுத்து வேறு தீவிரவாதிகள் யாராவது பதுங்கி இருக்கிறார்களா என்று பதான்கோட் விமானப் படை தளம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டை நேற்று மாலையுடன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் பஞ்சாபில் மேலும் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள திப்ரி கன்டோன்மெண்ட் பகுதிக்கு அருகே உள்ள பாந்தர் கிராமத்தில் இருக்கும் கரும்பு தோட்டத்துக்குள் அடையாளம் தெரியாத 2 பேர் பதுங்கி இருப்பதை அந்த ஊர் மக்கள் பார்த்துள்ளனர்.அவர்கள் இருவரும் நிறைய ஆயுதங்கள் வைத்து இருப்பதையும் கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது பற்றி பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து திப்ரி கன்டோன்மென்ட் பகுதிகளை ராணுவ வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். திப்ரி ராணுவ முகாமுக்கு வரும் அனைத்து பாதைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.திப்ரி ராணுவ பகுதியை குண்டு வைத்து தகர்க்கும் சதி திட்டத்துடன் அந்த 2 தீவிரவாதிகளும் அந்த பகுதியில் ஊடுருவி இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.இதற்கிடையே பதன்கோட் விமானப்படை தளம் அருகே சந்தேகப்படும்படி ஒருவர் பையுடன் சுற்றி கொண்டிருந்தார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல போலீஸ் சூப்பிரண்டு சல்விந்தர் சிங்கிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply