ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம்

maithiஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ளார்.இதேவேளை, இந்த நிகழ்விற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பாடசாலை அதிபர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றன.

இறுதி யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்புக்கு முதல் தடைவையாக விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, பொது மக்களை சந்திக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை செய்தி சேகரிக்கச் சென்ற வடக்கு ஊடகவியலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply