சவூதி அரேபியாவில் நாத்திக கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டவருக்கு 10 ஆண்டு சிறை, 2 ஆயிரம் சவுக்கடிகள்

8c328883-b423-43cd-aa3f-53143f3a1a51_S_secvpfநாத்திக கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டவருக்கு 10 ஆண்டு சிறை, 2 ஆயிரம் சவுக்கடிகள் தண்டனையாக வழங்கி சவூதி அரேபியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களை கண்காணிக்கும் மத போலீசார் 600-க்கும் மேற்பட்ட அரசுக்கு ஆட்சேபணைக்குரிய டுவிட்டர்களை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு ஆன்-லைன் செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. அதில், நாத்திக கருத்தினை கொண்ட 28 வயதான இளைஞர் ஒருவரும் சிக்கியுள்ளார். அந்த இளைஞர் தனது சொந்த கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வந்துள்ளார். போலீசார் அவரை அணுகிய போது அதற்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை. 

 

அவரது பெயரில் அந்த தகவலில் இல்லை.

 

அந்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை, 2 ஆயிரம் சவுக்கடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ஆயிரம் ரியாலும் அபராதமாக விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply