ஓமன் சாலை விபத்தில் இந்திய குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

car acsidentமராட்டிய மாநிலத்தை சேர்ந்த அந்த குடும்பத்தினர், இங்குள்ள ரஸ்டக் என்ற சுற்றுலாத்தலத்தை பார்வையிட்ட பின்னர், மஸ்கட் நகரில் உள்ள தங்களது வீட்டை நோக்கி நேற்று ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.அல் குவைர் பகுதியில் உள்ள பாலம் வழியாக வந்தபோது, பாலத்தின் ஓரத்தில் இருந்த கம்பத்தின்மீது அவர்களின் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த குடும்பத் தலைவர், அவரது மனைவி, மகன் மற்றும் ஒரு முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த தம்பதியரின் மூத்த மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மஸ்கட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply