சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க பரிந்துரை
ஏ.எஸ்.எம் விக்ரமசிங்க, பூஜித் ஜயசுந்தர மற்றும் சீ.டி விக்ரமரத்ன ஆகிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களின் பெயர்களே சிபார்சு செய்யப்பட்டிருந்தன.
இன்று பிற்பகல் அரசியலமைப்பு சபையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடிய போது இது குறித்து விரிவாக ஆரயப்பட்டது. அரசிலயமைப்பு சபையின் ஏனைய உறுப்பினர்களான ஷிப்லி அஸீஸ், ராதிகா குமாரசுவாமி ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு சிபார்சு செய்யப்பட்டிருந்த மூவரையும் தனியாக அழைத்து கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலம் விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply