ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி உரை
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் விசேட கூட்டத் தொடரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உரையாற்றவுள்ளார்.நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையத்தில் எதிர்வரும் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்திலேயே ஸ்ரீலங்கா சார்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உரையாற்றவுள்ளார்.
இதன்போது நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து இவர் உரையாற்றவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த கூட்டத்தில் ஐ.நா பொதுச் சபை தலைவர், ஐ.நா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள், ஐ.நா அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply