சோமாலியா ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 2 எம்.பிக்கள் உள்பட 15 பேர் பலி

somaliyaஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பிரபல ஓட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சோமாலியாவின் மொகதீசியோ நகரில் அமைந்துள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் புகுந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி முதலில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பின்னர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் உள்ளனர். அல் கொய்தா தீவிரவாத குழுவுடன் தொடர்புடைய அல் ஷபாப் எனும் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

தீவிரவாதிகளின் கண்மூடித்தனமான இந்த தாக்குதலில் சுமார் 15 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அங்குள்ள பலரையும் அந்த குழுவினர் சிறைபிடித்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

இதனிடையே தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்ட நகர போலீசார், இரண்டு தீவிரவாதிகள் ஓட்டலுக்குள் பதுங்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.மேலும் இந்ததாக்குதல் சம்பவத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இறந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதே அமைப்பினரால் மக்கா அல் முகராமா ஹொட்டல் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மட்டுமின்றி அந்த ஹொட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களை மீட்க சிறப்பு படையினர் பலமணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அம்பாசிடர் ஓட்டலும் அதே சாலையில் அமைந்துள்ளது, மட்டுமின்றி துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இந்த ஓட்டலுக்கு வருகை தரவிருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply