இலங்கையில் ரமழான் நோன்பை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கும் விஷேட விடுமுறை

ramadanமுஸ்லிம் அரச ஊழியர்களுக்கும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு விஷேட விடுமுறையை வழங்குமாறு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.அதற்கமைய அதிகாலை 3.30 தொடக்கம் காலை 6.00 மணி வரையும், பிற்பகல் 3.15 தொடக்கம் மாலை 4.15 மணி வரையும் , மாலை 6.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையும, இரவு 07.30 தொடக்கம் இரவு 10.30 மணி வரையுமான காலப் பகுதிகளில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு விஷேட விடுமுறையை வழங்குமாறு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply