தீவிரவாதிகள் கண்காணிப்பு தகவல் பரிமாற்றம்: இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம்
தீவிரவாதிகள் பற்றிய கண்காணிப்பு தகவலை பரிமாறிக்கொள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உயர் அதிகாரிகள் மட்ட அளவில் ஒப்பந்தம் நேற்று செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷியும், அமெரிக்கா சார்பில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு ராகுல் வர்மாவும் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் இரு நாடுகளும் சட்டவிதிக்குட்பட்டு தீவிரவாதிகள் பற்றிய கண்காணிப்பு தகவலை தங்கள் இருப்பிடத்தில் இருந்து பரிமாறிக்கொள்ள முடியும். மேலும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் இரு நாடுகளும் தொடர்ந்து ஒத்துழைப்பது என்றும் முடிவு செய்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply