ஜேர்மனியின் டுசல்டோர்ஃப் நகரை தாக்க சதி: ஐ.எஸ் திட்டம் முறியடிப்பு
டுசல்டோர்ஃப் நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 நபர்களை அதிரடியாக கைது செய்து சதி திட்டத்தை முறியடித்துள்ளனர்.இந்த விவகாரத்தில் கைதான 3 நபர்களும் சிரியா நாட்டவர் என ஜேர்மன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த சதி திட்டத்தில் தொடர்புடைய நபர் ஒருவருக்கும் விசாரணை அதிகாரிகள் கைதாணை பிறப்பித்துள்ளனர். குறிப்பிட்ட நபரை பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் அரசு கைது செய்துள்ளது.
டுசல்டோர்ஃப் நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை தாக்கி அழிக்கவே இந்த கும்பல் சதி திட்டம் தீட்டியதாகவும், இவர்களுக்கு உறுதுணையாகவும், இந்த சதி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முயன்றதும் ஐ.எஸ் தீவிரவாதிகள் என தெரிய வந்துள்ளது.
கும்பலில் இருவர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு அதிக இழப்பினை உருவாக்க திட்டமிட்டிருந்ததாகவும், இதனால் பொருள் மற்றும் உயிரிழப்பு அதிகமாகும் எனவும் ஐ.எஸ் கணக்கிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கைதான 3 பேரில் Saleh மற்றும் Hamza ஆகியோர் கடந்த 2014ம் ஆண்டு சிரியாவில் இருந்து துருக்கி சென்றுள்ளதாகவும், இவர்களின் சதி திட்டம் ஒப்புதல் பெறப்பட்டதும் 2015ம் ஆண்டு ஜேர்மனி வந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் அடுத்த சில தினங்களில் பிரான்சில் துவங்கவிருக்கும் யூரோ 2016 உதைப்பந்து சாம்பியன் கிண்ணத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இவர்களது செயல்பாடு இல்லை எனவும் ஜேர்மன் விசாரணை அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply