குற்றவாளிக்கு 90 நாட்களில் தண்டனை வழங்காவிட்டால் தற்கொலை செய்வேன்
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு குடும்பத்தினர் நொய்டாவில் இருந்து ஷாஜகான்பூர் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். புலந்த்சாகர் என்ற இடத்தில் அவர்களது காரை வழி மறித்த ஒரு கும்பல் கடும் அட்டூழியத்தில் ஈடுபட்டது.காரில் இருந்தவர்களிடம் நகை, பணத்தை கொள்ளையடித்த அந்த கும்பல், காரில் இருந்த ஒரு பெண் மற்றும் அவரது 13 வயது மகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றது. பிறகு துப்பாக்கி முனையில் தாயும் – மகளும் கற்பழிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேர பாலியல் துன்புறுத்தலுக்கு பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. குற்றவாளிகளை பிடிக்க 15 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த படையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு 3 மாதங்களுக்குள் தண்டனை வழங்காவிட்டால் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்வோம் என்று கற்பழிக்கப்பட்ட பெண்ணும், அவரது மகளும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply