காஷ்மீரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் மூவர் உயிரிழப்பு, 150 பேர் காயம்
காஷ்மீரில் பிரிவினைவாதிகள் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தநிலையில் அதனை முறியடிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விரிவிக்கப்பட்டது. மாநிலத்தில் இயல்பு நிலையானது தொடர்ச்சியாக 28-வது நாளாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஜுலை 8-ம் தேதி பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதில் இருந்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 53 பேர் பலியாகிவுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்ததில் மூவர் உயிரிழந்தனர். 150 பேர் காயம் அடைந்தனர். நவ்காம் பகுதியில் தொழுகை முடிந்ததும் பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் எடுத்த எதிர் நடவடிக்கையில் முகமது முக்பால் காண்டே உயிரிழந்தார் என்று போலீஸ் தெரிவித்து உள்ளது. முகமது முக்பால் உயிரிழந்த சம்பவம் பரவியதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இந்த கல்வீச்சு மற்றும் போராட்டத்தின் போது மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மோதல் சம்பவங்களில் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக பதட்டமான பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply