கொழும்பில் போதைப் பொருள் ஒழிக்கப்படும் : பிரதமர்
கொழும்பு நகரில் தொற்று நோயாக மாறியுள்ள போதைப் பொருளை ஒழிக்காமல், வீடுகள் அமைக்கப்படுவது பயனற்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.மாளிகாவத்தையில் நேற்று திறந்து வைத்த சியசெவன வீடமைப்புத் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறினார்.வீடமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது போன்று போதைப் பொருளை ஒழிக்கும் நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மாளிகாவத்தையில் 266 வீடுகளைக் கொண்ட மாடி வீட்டுத் தொகுதி நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply