ஜெர்மனி தீவிரவாதத் தாக்குதல்: பின்னணியில் யார் என கண்டறிய சௌதி அரேபியா உதவி
ஜெர்மனியில் கடந்த மாதம் நடைபெற்ற இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்களுக்கு பின்ணியில் இருப்போரை கண்டறிய சௌதி அரேபியா உதவி வழங்க முன்வந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதல்களில் சௌதி அரேபியர்கள் என்ன பங்களிப்பை செய்திருக்கின்றனர் என்பதை கண்டறிய இரு நாடுகளும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று கூறுகின்ற மூத்த சௌதி அதிகாரிகளின் கூற்றுக்களை மேற்கோள்காட்டி டெர் ஸ்பீகில் இதழ் தெரிவித்திருக்கிறது.தாக்குதல் நடத்தியோரை தீவிரவாத உணர்வு அடைய செய்வதிலும், அறிவுறுத்தியதிலும் பங்காற்றியிருக்கம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளோடு இரண்டு தாக்குதல்தாரிகளும் தொடர்பு கொண்டிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு தொடர்பு கொண்டிருந்த்தில் குறைந்தது ஒருவர் சௌதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.இத்தகைய தாக்குதல்களில் ஒன்று ரயிலில் பயணிகளை இலக்கு வைத்தும், இன்னொன்று இசை நிகழ்ச்சி ஒன்றிலும் நடத்தப்பட்டது,இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்தனர். தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply