கேரளாவில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ருமேனியர்கள்: இன்டர்போல் உதவியை நாடும் போலீஸ்
கேரளாவில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ருமேனியர்கள் என்பது தெரியவந்து உள்ளது.திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ.டி.பி.ஐ. ஆகிய வங்கி கிளைகளில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்தது. சம்பவம் தொடர்பாக வாடிக்கையாளர்கள் சார்பில் அந்தந்த வங்கி கிளைகளில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மும்பையில் உள்ள சில ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், திருவனந்தபுரத்தில் உள்ள சில ஏ.டி.எம்.களில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய எலக்ட்ரானிக் உபகரணங்கள் பொருத்தப்பட்டு வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம்.கார்டுளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய எண்ணை பதிவு செய்து, போலி கார்டுகள் மூலம் மும்பையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏ.டி.எம். மோசடியில் ஈடுபட்டவர்கள் ருமேனியா நாட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் என்பது தெரிய வந்துள்ளது. திருவனந்தபுரம் கோவளத்தில் அறை எடுத்து தங்கி இருந்த அந்த வாலிபர்கள் இந்த நவீன மோசடி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக அந்த வாலிபர்களின் பாஸ்போர்ட் நகலை பறிமுதல் செய்து கேரள போலீசார் விசாரணையினை முடுக்கி உள்ள நிலையில் ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், ஏ.டி.எம். கொள்ளை மோசடியில் ஈடுபட்ட ருமேனியா நாட்டை சேர்ந்த 3 வாலிபர்கள் அவர்களது நாடுகளுக்கு சென்று இருக்கலாம் என்று கருதுவதால், அவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட முடிவு செய்துள்ளோம். கேரளாவில் வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஏ.டி.எம்.களின் பாதுகாப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply