ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: இருவர் பலி
ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆப்கான் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலின் போது ஏராளமான மாணவர்கள் வகுப்பறைக்குள்ளே சிக்கி இருந்தனர். இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 10-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதல் நடைபெற்றுள்ளது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு, பல்கலைக் கழகம் அமைந்துள்ள பகுதிகளில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply