உத்தரபிரதேச ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு

trainமத்தியபிரதேசத்தின் இந்தூரில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு புறப்பட்ட இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே புக்ரயான் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் 14 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தன.
இந்த கோரவிபத்தில் 145 பேர் பலியாயினர். படுகாயம் அடைந்த 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply