சமூக வலைத்தளங்களுக்கு எதிராக சட்டமூலம்: மோதிக்கொண்ட விஜேதாஸ, மங்கள

சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுபடுத்த புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்தி இனவாதம் மற்றும் மதவாதங்கள் பரப்பப்படுவதனை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான சட்டமூலம் அவசியம் என நீதி அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பெரும்பான்மையினர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.நீதி அமைச்சர் கூறவதற்கமைய சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுபடுத்த புதிய சட்டமூலம் கொண்டுவருவது நகைச்சுவையான ஒரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக யாராவது ஊ சத்தமிட்டால் அதனை விட சத்தமாக ஊ சத்தமிட அரசாங்கம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply