வடக்கு மக்கள் முறைப்பாடுகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முறையிட வசதி

வடக்கு மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இதற்கு வசதியாக செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அடுத்த வருடம் முதல் செயல்படவிருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.இந்த அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஆளுநர் இது தொடர்பில் தெரிவித்தார்.இதன் மூலம் மக்கள் பிரச்சினைகள் நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply