கனடா நாட்டில் சீக்கியர்கள் வழிபாட்டு தலத்தில் இனவெறி தாக்குதல்
கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கால்கரி நகரில் சீக்கியர்கள் வழிபாட்டுத்தலம் (குருத்வாரா) உள்ளது.அந்த வழிபாட்டுத்தலத்தின் உள்ளேயும், வெளியேயும் 6 இடங்களில் இனவெறி தாக்குதலை வெளிப்படுத்தும் வகையில் சுவற்றில் வர்ணத்தால் வாசகங்களை எழுதி கிறுக்கி உள்ளனர்.இது அங்கு வாழ்கிற சீக்கியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து கனடாவின் உலக சீக்கிய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீக்கிய சமூகத்தினர் உஷாராக இருக்கும்படியும், வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஏதாவது தென்பட்டால் அதுபற்றி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த சம்பவம் பற்றி உலக சீக்கிய அமைப்பின் ஆல்பர்ட்டா நகர துணைத்தலைவர் தேஜிந்தர் சிங் சித்து கூறுகையில், ‘‘குருத்வாரா மீது நடத்தப்பட்டுள்ள இனவெறி தாக்குதல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. கனடாவில் பல இடங்களில் இத்தகைய இனவெறி உணர்வினை எங்களால் பார்க்க முடிகிறது. இந்த வருந்தத்தக்க செயல்கள், அறியாமையால் ஊக்குவிக்கப்படலாம். இத்தகைய இனவெறி தாக்குதல்களை நிராகரிக்கிற வகையில் சீக்கியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்’’ என்று தெரிவித்தார்.இத்தகைய சம்பவம் தொடர்பான வழக்குகளில் புலன்விசாரணையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் ஒத்துழைப்பை போலீசார் நாடி உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply