இலங்கையில் 31ம் திகதி தேசிய துக்கதினம்.!

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 31ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்விவகார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அன்னாருடைய இறுதிக் கிரியைகளுக்கு பூரண அரச அனுசரனை வழங்கப்படும் என்றும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார்.அதேவேளை, மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடல் இன்று பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரம், இன்று காலை 10.30 தொடக்கம் 11.30 வரை, மறைந்த மூத்த அரசியல்வாதியான ரட்ணசிறி விக்ரமநாயகவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கருஜெயசூரிய தெரியப்படுத்தியுள்ளார்.

ரட்ணசிறி விக்ரமநாயக்க 2000 -2001 ஆண்டு மற்றும் 2005 – 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply