திட்டமிடல் இல்லாத குடும்பத்தைப் போல இந்த அரசாங்கம் : பிரசன்ன ரணதுங்க

திட்டமிடல் இல்லாத ஒர் அரசாங்கம் இன்று நாட்டை ஆள்கின்றது என முன்னாள் மேல் மாகாண சபை முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.பியகமயில் நேற்று மாலை இடம்பெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். ஒரு குடும்பத்தில் கணவன் குடிகாரனாகவும், மனைவி ஒழுங்கில்லாதவளாகவும் இருந்தால் குடும்பத்தை கொண்டு நடாத்த பணம் இருக்காது. இதனால், அவர்கள் அயல் வீடுகளில் கடன்படுவார்கள். அதனையும் குடித்து செலவு செய்வார்கள். பின்னர் வீட்டிலுள்ள சாமான்களை விற்பனை செய்வார்கள். இதுதான் அந்த திட்டமிடல் இல்லாத குடும்பத்தின் நிலை.

இதுதான் இந்த அரசாங்கத்தின் நிலையும். தற்பொழுது அரச சொத்துக்களை விற்பனை செய்ய ஆரம்பித்தள்ளது. எனது சகோதரர் அர்ஜுனவும் அங்கே காணப்படுகின்றார். நான் அவருக்கு சொல்கின்றேன். அவர் ரெஜி ரணதுங்கவின் பிள்ளையாயின், அரச சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தை விட்டுவிட்டு எம்முடன் வந்து சேர்ந்து கொள்ள வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க அழைப்பு விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply