வட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப்

வட கொரியாவிடமிருந்து வரும் அணு சோதனை அச்சுறுத்தலை சீனாவுடன் சேர்ந்தும் அல்லது சீனாவின் உதவி இல்லாமலும் அமெரிக்காவால் “தனியாக தீர்க்க” முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.”சீனா இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் அமெரிக்கா அதனை செய்யும் என நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரிட்டன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவால் தனியாக வெற்றிப் பெற முடியுமா என்று அழுத்தமாக கேட்டதற்கு “முழுமையாக” என அவர் பதிலளித்தார்.

இந்த வாரம் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பிற்கு முன்னதாக டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

“வட கொரியாவின் மீது சீனா மிகப்பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது. வட கொரியா தொடர்பாக தங்களுக்கு உதவ சீனா முடிவெடுக்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறு உதவினால் அது சீனாவிற்கு பலனை அளிக்கும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அது யாருக்கும் பலனளிக்காது” என டிரம்ப் தெரிவித்தார்.

வட கொரியா மற்றும் அமெரிக்கா நேருக்கு நேர் மோதுமா என்று கேட்டதற்கு இதற்குமேல் நான் எதுவும் கூற வேண்டியதில்லை, அமெரிக்கா வட கொரியாவை முழுமையாக தனித்து எதிர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply