வேலையற்ற பட்டதாரிகளைப் காயப்படுத்தும் விதமாகப் பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர்
வடக்கு, கிழக்கு மாகாண பட்டதாரிகள் வேலைவாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கணித, விஞ்ஞான ஆசிரியர்களை தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.மலையகப் புறங்களில் உள்ள பாடசாலைகளில் பெருமளவில் ஆசிரியர் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருகின்றது. இந்த பிரச்சினை குறித்து வினவிய போதே, அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மலையகத்தில் கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வடக்கு, கிழக்கில் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும் வடக்கு, கிழக்கில் குறித்த பாடங்களுக்கு தகுதியான, வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ள பட்டதாரிகள் எவரும் விண்ணப்பிக்கவில்லை எனவும் கூறினார்.
இருப்பினும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் இந்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ் நாட்டிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்கும் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply