நாளை முதல் மீண்டும் கடும் மழை வளிமண்டலவியல் திணைக்களம்
நாளை முதல் கடும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தக் காலநிலை நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் மீண்டும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. மேற்கு , சப்ரகமுவ தெற்கு மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்று இன்று காலை 5.30 க்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
விசேடமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஊடாக அடிக்கடி 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மழையின் பொழுது இந்தக் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
இடிமின்னல் தொடர்பில் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டல திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தக் காலநிலை எதிர்வு கூறல் இன்று முதல் மூன்று நாட்களுக்காக விடுக்கப்பட்டுள்ளது என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply