முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும். அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு, 2001ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டவர். அப்பாத்துரை வினாயகமூர்த்தியின் இறுதிச் சடங்கு யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply