யுத்தம் முடிந்தாலும் இனவாதம் ஓயவில்லை : ஹக்கிம்

காப்புறுதி தொகையைப் பெறுவதற்காக முஸ்லிம் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு தாமே தீ வைப்பதாக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் குறிப்பிடுவதை வன்மையாக கண்டிப்பதாக நீர்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற ஜெனீவா பிரேரணை குறித்து சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிடப்பட்ட 16இற்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யுத்தம் முடிவடைந்த பின்னர் சில சக்திகள் நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இந்த சக்திகள் தற்பொழுது வெறுக்கத்தக்க பேச்சுக்களை பரப்பி வருகின்றன. இதனுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் மத ரீதியான சகிப்புத் தன்மைகளை உறுதிப்படுத்துவதற்கான விடயங்களும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். நாட்டில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர்களுக்கு எதிராக அரசாங்கமும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply