பிலியந்தலை துப்பாக்கிச் சூடு இருவர் கைது

பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 9ம் திகதி போதைப் பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் மற்றும் சிறுமி ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும், பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர்.இந்தநிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 மற்றும் 27 வயதான இருவர் அகுங்கல்ல – தர்கா நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்களை இன்று கெஸ்பேவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply