யுத்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் : ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.யுத்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சித் தலைவருடன் தாமும் உடன்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் கடுமையான யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருப்பதை மறுக்கவில்லை என விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு தெரிவிக்கும் அரசாங்கம், போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர் ஒருவரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காது என தெரிவித்திருப்பதையும் தனது கடிதத்தில் ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்ற வழக்கில் சாட்சியமளிக்கப் போகும் முதற்சாட்சியாலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்படும் எனவும் தமிழர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் நோக்கம் எதிர்க்கட்சித் தலைவருக்கு புலனாகும் என தெரிவித்துள்ள வீ.ஆனந்தசங்கரி, தர்மசங்கடத்தை உண்டுபண்ண விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply