பொலிஸ் திணைக்களம் மூன்றாக பிரிப்பு : புதிய சட்டமூலம் ஆகஸ்டில்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தை மூன்று பிரதான பகுதிகளாக பிரிக்கும் சட்டமூலமொன்றை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த யோசனை 288 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.இதன்படி, முழு பொலிஸ் திணைக்களமும் தேசிய பொலிஸ், மாகாண பொலிஸ் மற்றும் நகர சபைப் பொலிஸ் என மூன்றாக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸ் திணைக்களம் இவ்வாறு மூன்றாக பிரிக்கப்படுவதனால், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, இரகசியப் பொலிஸ் சேவை என்பன பலவீனப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பரிந்துரையின் கீழ் வட மாகாண சபைக்கும் தனியான பொலிஸ் பிரிவு அமைக்கப்படவுள்ளது.
இந்த யாப்புத் திருத்தச் சட்ட மூலத்தினால், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல், அரச சேவையை மீளமைத்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரைகளை முன்வைக்கவென அமைக்கப்பட்ட 6 குழுக்களின் பின்னர் இந்த பரிந்துரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு பிரிக்கப்படுவதனால், மாகாண பொலிஸ் பிரிவிலுள்ளவர்கள் இரண்டாம் தரத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
அத்துடன், தேசிய மட்ட பொலிஸாருக்கு, மாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல் குறித்து, சம்பந்தப்பட்ட மாகாண அனுமதியின்றி விசாரணை நடாத்த முடியாமல் போகும் நிலைமை உருவாகும்.
இந்த மாகாண பொலிஸ் பிரிவுகளுக்கும் பிரதேச பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அச்சட்ட மூலத்தில் இடம்பெற்றுள்ளது. இதுவரை இலங்கை முழுவதற்கும் ஒரு பொலிஸ் மா அதிபரே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply