சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு 6-ந் தேதி விசாரணை
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேர் சார்பிலும் மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வருகிற 6-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகு தான் மனு ஏற்கப்படுமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்பது தெரியவரும்.
சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் கூறி இருப்பதாவது:-
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் என்னை தண்டிப்பதற்கு நான் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல, அந்த சட்டமானது அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக்கு பொருந்தாது. எனவே இந்த வழக்கில் எனக்கு விதிக்கப்பட்டுள்ள 4 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.சீராய்வு மனுவில் விடுதலை கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் இன்று சசிகலா பேரவையினர் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply