ஃபிரான்ஸில் மசூதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்

ஃபிரான்ஸின் தெற்கு பகுதியில், மசூதி ஒன்றிற்கு வெளியே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு, அவீன்யோங்கில் உள்ள அராமா மசூதியிலிருந்து வழிபாட்டாளர்கள் வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில் ஹூட் ( சட்டையுடன் தைக்கப்பட்ட ஒரு வித முக்காடு) அணிந்திருந்த சந்தேக நபர்கள் இருவர் அவர்களை நோக்கி வந்தனர்.

சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கியும், சிறிய துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தனர் என்றும் காரிலிருந்து இறங்கி வந்து கூட்டத்தை நோக்கி சுட்டனர் என்றும் ஃபிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இதை பயங்கரவாத தாக்குதலாக கருதவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply