27 வருடங்களின் பின்னர் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 54 ஏக்கர் விடுவிப்பு

27 வருடங்களின் பின் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் அதனை அண்டிய 54 ஏக்கர் நிலப்பரப்பும் இன்றைய தினம் (03) விடுவிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் பலாலியில் போர் வெடித்ததை அடுத்து, மயிலிட்டிப் பகுதியில் இருந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர்.

அதன் பின்னர் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மயிலிட்டிப் பகுதி மக்கள் சொந்த இடங்களைத் திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு தற்போது கிட்டியுள்ளது.

151 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணியே இவ்வாறு விடுவிக்கப்பட்டது.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாரச்சியினால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்திடம் குறித்த காணிக்கான உறுதிப்பத்திரங்களை உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply