அமெரிக்காவில் பாஸ்டன் விமான நிலையத்தில் பாதசாரிகள் மீது பாய்ந்த டாக்ஸி : பலர் காயம்

அமெரிக்காவில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால், அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில், மாசசூசெட்ஸ் மாகாணத்தின் பாஸ்டன் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் வெளிப்புறத்தில் பாதசாரிகள் அதிகம் பேர் குழுமியிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு டாக்ஸியானது கூட்டத்தில் வேகமாக பாய்ந்தது. இதனையடுத்து, விமான நிலையத்தில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனே, அங்கு விரைந்த போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் காயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைப்பதற்காக தீவிரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கேள்விகள் எழுந்த நிலையில், இது டாக்ஸி ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட சாதாரண விபத்துதான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply