உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரித கதியில் நடாத்துவதற்கு ஆலோசனை :மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரித கதியில் நடாத்துவதற்கு சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:-

உள்ளுராட்சி மன்றம் குறித்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசத்தை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

துரித கதியில் தேர்தலை நடாத்துவது குறித்து சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படும்.

உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் கடந்த 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கடந்த 30ம் திகதி அது குறித்த அறிவிப்பு ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் நிமால் பத்மசிறியிடம் நேரடியாக வினவி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply