3600 கோடி ரூபாய் செலவில் உலகின் மிகவும் சவாலான ரெயில் பாதையை அமைக்கும் சீனா
உலகின் மின்னல் வேக ரெயில் சேவை என்றால் நினைவுக்கு வருவது சீனாதான். அசாத்திய உழைப்பு, அசரவைக்கும் திட்டம் என்று பார்த்து பார்த்து தனக்கான எதிர்கால போக்குவரத்தை அந்நாடு மெருகேற்றி வருகிறது. உலகில் மக்கள் தொகை அதிகமாக கொண்ட சீனா, போக்குவரத்து வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
அதன் ஒரு பகுதியாக, சிச்சுவான் – திபெத் பகுதிகளை இணைக்க ரெயில் பாதையை சீனா அமைத்து வருகிறது. புவியியல் ரீதியாக அதள பாதாளங்களை கொண்டுள்ள இப்பகுதியில் சாலை அமைப்பதே பெரும் சவாலாக இருக்கும். ஆனால், சீனப் பொறியாளர்களின் சீர்மிகு திட்டத்தால் இந்த பகுதியில் ரெயில் பாதை சாத்தியமாகியுள்ளது. 1700 கிலோ மீட்டர்கள் கொண்ட இந்த பாதை இந்திய மதிப்பில் சுமார் 3600 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இந்த ரெயில் பாதை சாத்தியமாகும் பட்சத்தில் திபெத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது ரெயில் பாதையாக இது இருக்கும் என சீன ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply